பல்லவி
ஒரு தனி முதல் நிலை மொழி தமிழ் வாழ்க ஓது நல் மாணவர் வாழ்க
அனுபல்லவி
மருவெனத் தரமுயர் எமதுயிர் மத்ய மாவித்தியாலயம் வாழ்க
தெருள் அருள் பலகலை இருளகல் தெய்வ தேகநல் ஆசிரியர் வாழ்க
எறிகடல் அலையின் எழுமொலி முழவம் எனவினை செந்நெல் குலைகள் பறி பரதமும் ஆடும் பழனமும் சூழக் கயல்கள்
தெறிதடி ஓடப் புனல்கள்
தெளிந்திசை பாடத் திசைகள் அறிந்திடும் காரேர் மூதூர் அமைந்த வித்தியாலயம் வாழ்க
சரணம்
பத்தினித் தெய்வம் சித்தருள் காவல் பார்த்திடத் திருப்பலவாக
வித்தகராக இத்தரை பேணும் விபுலாநந்தன் வாழ்க
முத்தமிழ் ஏடாம் யாழின் முழுவுயர் நூலாய்க் காணும்
புத்தெழில் காரை தீவை புதுக்கும் வித்தியாலயம் வாழ்க
ஆத்மீக நெறியும் அறிவியல் கலையும் ஆக்கிய மொழியினை நிலமும் காத்திடும் வீரக் காதலும் சேர்ந்து
காவியப் பண்பாடுறவும்
ஏத்திடப் பாருயர் வேத்தும்
ஏடுறு கல்விக் கூடம் வாழ்த்திடும் தாயே நீடு
வாழிய வாழி வாழி







