விபுலானந்தா மத்திய கல்லூரி

வரலாறு

புதிதாக உயர்தரத்திற்கு வருகை தந்த மாணவர்களை வரவேற்பு நிகழ்வு

448698193-982858633541312-4714593679886293431-n_x_thumb.jpg
WhatsApp Image 2024-09-11 at 9.33.38 AM.jpeg
WhatsApp Image 2024-09-11 at 9.33.35 AM.jpeg

பாடசாலை வரலாறு தொடரர்பான அடிப்படைகள்

தேடு கல்வி இல்லாததோர் ஊரை தீயினுக்கிரையாக மடுத்தல்" எனக் கல்வி இல்லாத ஊரின் இழிவைக் கூறிய "புதுமைக் கவிஞன் பாரதி" அதற்கான நிவர்த்தியையும் கூறாமல் விட்டுவிடுவானா? "வீடு தோறும் கலையின் விளக்கம்

வீதி தோறும் இரண்டொருபள்ளி நாடு, முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்கள் எங்கும் பல பல பள்ளி" என பாடசாலையின் அவசியத்தினை 20ம் நூற்றாண்டில் வலியுறுத்திச் சென்றார் பாரதியார் அந்த வகையில் இந்த பாரதியை பார் முழுவதும் தெரியப்படுத்திய முத்தமிழ் வித்தகர் என்ற பட்டத்தை தனதாக்கிக் கொண்ட சுவாமி விபுலாநந்தரின் பெயர் கொண்டு இன்று கல்லூரியாக உயர்ந்து விளங்கும் இக் கல்விச் சாலையின் அத்திவாரத்தினை சற்று ஆய்வு செய்து அங்கு இடப்பட்ட

அடிக்கல்

தடைகளை

பொருத்தமானது

உடைத்து படிக்கற்களாக்கி உயர்ந்து விளங்குமாற்றை ஆராய்வது

கல்விமான்களின் சுருத்தில் முகிழ்ந்து எண்ணத்தில் விதை ஊன்றப்பட்ட ஆண்டு 15.01.1950 ஆகும். அரசு சார்ந்த இப்பாடசாலையை அமைப்பதற்கு பலமான எதிர்க்குரல்கள் எழுந்த போதும் திரு.எஎஸ்.பொன்னையா திரு.கே.விஜயரெட்ணம், திரு.கே.சண்முகம், திரு.கே.கோவிந்தசாமி; திரு.ரீ.எஸ்.வேலுப்பிள்ளை, திரு.கே.வெற்றிவேல், திரு.கே.வேல்நாயகம், திரு.கே.சாமித்தம்பி ஆகியோரின் அயராத முயற்சி இக் கல்லூரிக்கான உறுதியான அடிக்கல்லை. அன்று ஆழமாக நட்டது.

“அரசாங்க கனிஸ்ட ஆங்கிலப் பாடசாலை" இக்கல்லூரிக்கு அன்று பெயரிட்டனர். என அவ்வேளை கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த வித்தியாதிபதி திரு.எஸ்.அருளாந்தி இப்பாடசாலையை முறையாக ஆரம்பித்து வைத்தார், முதன் முதலாக தன்கல்விப் பணியை இப்பாடசாலை நொடர்வதற்கு அதிபராக திரு.என்.தங்கராஜா, ஆசிரியர்கள் நால்வர், மாணவர்கள் பதினாறு பேர் ஆகியோர் தங்கள் பங்களிப்பினை நல்கினர்.

மாறும் உலகில் மாற்றமும் தவிர்க்க முடியாததே அந்த அடிப்படையில் 1950.03.01 திரு.எஸ்.தங்கராஜாவிற்கு பின் அன்று களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியரான திரு.பி.இராஜரெட்னாம் இப்பாடசாலையின் இரண்டாவது அதிபரானார். 1950.03.01 1954.02.01 வரை பதவிவகித்த இவர் காலத்தில், தந்தம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இப் பாடசாலையே சிறந்தது எனக் கருதி பெற்றோர் சேர்த்தனர். எவ்வாறாயினும் ஊடக மொழியாக ஆங்கிலமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது எனினும் இந்த அதிபரின் இடமாற்றத்தினால் ஆங்கிலப் பாடசாலை என்ற அந்தஸ்த்தினை இழந்தது.

இவரைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியரான திரு.எஸ்.கே.கந்தப்பு 1954.02.02-1960.04.31. வரை மூன்றாவது அதிபராக நியமிக்கப்பட்டார். பாடசாலை வரலாற்றில் இவரது காலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டிருந்தது. இவரது காலத்தில் பாடசாலைக் காணி உடபட பாடசாலை எல்லைகள் சீரமைக்கப்பட்டது. திரு.க.விஜயரெட்ணம், திரு.கா.வேல்நாயகம், திரு, க.வெற்றிவேல், திரு.மார்க்கண்டு, திரு.ந.தங்கராஜா ஆகியோர் தாமாக முன்வந்து இலவச பகுதி நேர வகுப்புக்களை நடாத்தினர். இக்காலப்பகுதியில் கனிஸ்ட பாடசாலையானது, சிரேஸ்ட பாடசாலையாகத் உயர்த்தப்பட்டது. முதன் முறையாக கல்லாலான பாடசாலையும் அதிபர் விடுதியும் கட்டப்பட்டது." தரம் இதற்கு அனுசரணை வழங்கியவர் பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் "ஜனாப் 'மெர்சா' ஆவார். 1958ஆம் ஆண்டு காலப்பகுதியில் முதன் முதலாக விளையாட்டு போட்டியும் இடம் பெற்றது.

திரு.கந்தப்பு அவர்களின் இடமாற்றத்தினைத் தொடர்ந்து மட்/கல்லடி திரு.எம்.ஏ.ஜெபமாலை 1960.05.01 1960.07.03 1960.10.29 1961.01.02 வரையான குறுகிய காலப்பகுதியில் தன் சேவையை ஆற்றினார். இவரைத் தொடர்ந்து திரு.எம்.சச்சிதானந்தசிவம் 1961.01.03 பணிக்கப்பட்டார். மண்டபம், 1968.06.30. யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த ஐந்தாவது அதிபராகச் சேவையாற்றப் ஒரு சிறிய நூலகம் ஆய்வு கூடம் என்பன இவரால் அமைக்கப்பட்டன. பொருட்காட்சி ஒன்று நடத்தப்பட்டதுடன் கருவிகள், றோணியோ இயந்திரம், இசைத்தட்டுக்கள், பீ.பீ.சி. திட்டங்கள் கலைக்களஞ்சியம் போன்ற செயற்றிட்டங்களும் புகுத்தப்பட்டன. மற்றுமொரு குறிப்பிடத்தக்க விடயம் முதல் முறையாக உயர்தர கலைப்பிரிவும் ஆரம்பிக்கப் பட்டமையாகும்.

இவரது பணியைத் தொடர்ந்து ஆறாவது அதிபராக திரு.யோகம் வேலுப்பிள்ளை அவர்கள் 1968.07.01 1970.09.03 வரை கடமையாற்றினார். இவரின் தொடர்ச்சியாக 1970.09.04-1975.04.06. வரை வித்தியாலயத்தின் ஏழாவது அதிபராக திரு.இக்நேசியஸ் கோயீற் பரம்பில் சேவையாற்றினார். தளபாட சீர்திருத்தமும்இ ஔவை மண்டப வேலைகளும் இவர் காலத்தில் செயற்படுத்தப்பட்டன. பாடசாலைக் கீதம்இ விபுலாநந்தர் சிலைத் கலைமகள் ஓவியம்இ கீழைத்தேய மேலைத்தேய அறிஞர்களின் ஓவியங்களைக் கட்டடங்களில் வரைந்தமை என்பவற்றோடு நூறு அடி நீளமான கட்டடம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

இன்று வளர்ந்தோங்கும் இக்கல்லூரியின் எட்டாவது அதிபராக இப் பாடசாலையிலேயே சுற்ற திரு.ரி.மயில்வாகனம் 1975.04.07-1979.07.31 வரை அதிபராக பதவி ஏற்றார். திரு.இக்னேசியஸ் கோயில் பரம்பில் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒளவை மண்டபம் இவர் காலத்தில் பூரணப்படுத்தப்பட்டது. அத்தோடு கட்டிமுடிக்கப்பட்டது. வித்தியாலயத்தின் நுழைவாயில் வடக்குப்புறத்தில் இருந்து கிழக்குப் புறத்திற்கும் மாற்றப்பட்டது. இவருக்கு உதவியாக திரு.எஸ்.இராசதுரைஇ திரு.எஸ்.சிவசம்பு ஆகியோர் பிரதி அதிபர்களாயிருந்து பல வழிகளிலும் ஒத்தாசை புரிந்தனர், இவர் காலத்திலேயே முன்னை நாள் மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினரும் வளர்ந்தோர் கல்வி அதிகாரியுமான திரு.இ.வினாயகமூர்த்தி அவர்களின் துனையோடு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ம.கனகரெத்தினம் அவர்களது சிபாரிசின் பெயரில் விபுலாநந்த மத்திய கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. 1978ம் ஆண்டு சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டன. கிழக்குப் பறத்தில சிரமதான அடிப்படையில் எல்லைச் சுவரும் கட்டப்பட்டது.

இவரைத் தொடர்ந்து 1977,01.01 இல் இங்கு பிரதி அதிபராக கடமையாற்றிய திரு.பி. இராஜநுரை அவர்கள் ஒன்பதாவது அதிபராக கடமையேற்றார். இவரது சேவைக்காலம் மிகவும் குறுகியதாக

இருந்தது பத்தாவது அதிபராக காரைதீவைச் சேர்ந்த சைவப் புலவர் பண்டிதர் வி.ரி. செல்லத்துரை அவர்கள் நியமனம் பெற்று 1977.12,31 வரை கடமையாற்றினார்.

மேற்படிப்புக்காக சென்ற திரு.ரி.மயில்வாகனம் அவர்கள் பதினோராவது அதிபராக மீண்டும் பதவியேற்றார். சிறிது காலத்தின் பின் திருகோணமலையைச் சேர்ந்த எம்.ஏ பட்டதாரியான திரு.க.நடராஜா அவர்கள் பன்னிரெண்டாவது அதிபராக கடமையேற்றார். (1979.09.01- 1983.10.25.) ஆண்டு வரை இவரது பணி தொடர்ந்தது இவரது காலம் இவ் வித்தியாலயத்தின் பொற்காலமாகும் நிர்வாகத் திறமை மிக்கவராகவும், இவரது ஆளுமையின் கீழ் கட்டுக்கோப்பான குழுவாக அனைவரும் இயங்கியதன் விளைவாகவும் பாடசாலை பௌதீக மற்றும் கல்வி வளம்" என்பவற்றில் உச்சநிலையை அடைந்தது.

இவருக்குப் பக்கத்துணையாக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. ரங்கநாயகி பத்மநாதன் முன்னை நாள் மாவட்ட சபை உறுப்பினர் திரு.இ.விநாயகமூர்த்தி பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர் திரு.க.விஜயரெத்தினம் ஆகியோர் காணப்பட்டனர். இவரது காலத்தில் கனகரெத்தினம் என்ற பெயரில் இரண்டு மாடிக்கட்டிடமும், பெற்றார் ஆசிரியர் சங்கக்கட்டடமும், மனையியல் ஆய்வு கூடமும், உருவாக்கம் பெற்றது. உயர்தரத்திற்கான விஞ்ஞான, வர்த்தகப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். வெளி இடங்களில் இருந்தும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்தும் ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டன. பாடசாலைக்கு வேண்டிய ஒலிபெருக்கி இவர் காலத்திலேயே பெறப்பட்டன.

பின்னர் இவ்வித்தியாலயத்தின் பதின்மூன்றாவது அதிபராக திரு.எஎஸ். மகாலிங்கம் அவர்கள் பதவி ஏற்றார். 1983.10.26 1987.01.14. வரை இவர் இங்கு பணியாற்றினார். இவர் காலத்தில் மாணவர்கள் தங்கியிருந்து படிக்கக்கூடிய விடுதி ஒன்று கட்டப்பட்டது வடகிழக்குப் புறத்து எல்லை புறமதிலும் கட்டப்பட்டன.

இவருக்கு பின் பதினான்காவது அதிபராக திரு.பி.பாக்கியராஜா அவர்கள் அதிபர் பதவியைப் பொறுப்பேற்றார். 1987.01.15 19991.06.09 வரையான காலப்பகுதியில் இவரது பணி இங்கு இடம் பெற்றது. காரைதீவு பிரதேசப் பாடசாலையின் கொத்தணி அதிபராக இவர் செயற்பட்டார். பாண்ட்வாத்தியக் குழுவினை மறுசீரமைத்து விளையாட்டுப் போட்டி நிகழ்வில் வாசிக்கச் செய்தார். காரைதீவின் பிரதான வீதியில் பாடசாலையின் பெயர்ப்பலகை நிறுத்தப்பட்டது

இதன் பிற்பாடு பதினைந்தாவது அதிபராக காரைதீவைச் சேர்ந்த விஞ்ஞானப் பட்டதாரியான திரு. த. சண்முகரெத்தினம் அவர்கள் 1991.06.10 - 1996.11:05. வரை அதிபராக செயற்பட்டார். இவரது காலம் வித்தியாலய வரலாற்றில் மறுமலர்ச்சிக்காலமாகக் விபுலாநந்த ஞாபகார்த்த நூற்றாண்டு கொள்ளப்படுகின்றது. சுவாமி மண்டபமான மூன்று மாடிக் கட்டடமானது திறந்து வைக்கப்பட்டது. விபுலாநந்தர் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கணினி அறை பூர்த்தி செய்யப்பட்டது. ஸ்ரீ கண்ணகை அம்மனின் தேவஸ்தானத்தின் உதவியோடு பாடசாலைக்கு பாரிய முகப்பு வாயில்கள் பொருத்தப்பட்டன பாடசாலையின் பெயரானது விபுலாநந்த மத்திய "கல்லூரி" என அழைக்கப்பட்டது. பரீட்சை வேலைகளுக்கென தனி ஒரு அறையும் தொலைபேசி ஒன்றும் பொருத்தப்பட்டது. இவ்வாறு மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அதிபர் பதவி உயர்வு பெற்று செல்ல பிரதி அதிபர்.சு. முத்துலிங்கம் அவர்கள் பாடசாலையை பொறுப்பேற்றார். இவரது காலத்தில் வித்தியாலயம் பல்வேறு முன்யேற்றங்களை கண்டன. பின்னர் பதினாறாவது அதிபராக இ.கி.ச.பெண்கள் பாடசாலையில் அதிபராய் இருந்த திருமதி ஆ சத்தியதேவா 1996.11.06 முதல் 1998 06:29 வரை அதிபராகச் சேவையாற்றியுள்ளார்.

இதேவேளை இக்கல்லூரியின் நூலகம்இ ஆய்வுகூடம் ஆகியவற்றிற்கு ஜப்பானிய நிறுவனமான JICA ஆல் நிதி உதவி வழங்கப்பட்டது. இக்கல்லூரியின் வரலாற்றில் முதன்முறையாக செல்வி.ச.சாலினி க.பொ.த(சா/த) பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழிமூலமான மாணவர்களில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று 10A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை. சேர்த்தார்.

கல்லூரியின் இருபத்திரண்டாவது அதிபராக திரு.S.கந்தசாமி அவர்கள் 2008.01.03

2009.09.15

வரை கடமையாற்றினார். இக்கால பகுதியில் A/L மாணவர்களின் முயற்சியினால் சுவாமி

விபுலானந்தரின் உருவச்சிலை மறுசீரமைக்கப்பட்டதுடன் மாணவர்கள் கல்வியிலும் திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர். இக்கல்லூரியின் 23வது அதிபரரசு விளங்கும் திரு.ரி.வித்யாராஜன் அவர்கள் 2009.09.16ம் திகதி அன்று இக்கல்லூரியைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது காலத்தில் இக்கல்லூரியில் கல்வி சார்ந்த பல்வேறு சாதனைகள் மாணவர்களால் பெறப்பட்டு வருகின்றன. மாணவர்களின் திறமையின் வெளிப்பாடே சிறந்த அதிபரும். ஆசிரிய குழாமும் ஒரு கல்லூரியினை இயக்குவதற்கு

தக்க சான்று.

கல்லூரி வரலாற்றில் க.பொ.த. (சா/த) பரீட்சையில் 2016ல் கல்லூரியின் சிறந்த பெறுபேறாக 94 சித்திகளை அறுவர் பெற்றிருந்தமையும் இறுதியாக க.பொ.த. (உ/த) 2019 இல் 03 மருத்துவம் 02 பொறியியல் உட்பட 34. மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றமை பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு ஓர் சான்றாகும். தொழில்நுட்ப ஆய்வுகூடம் கட்டப்பட்டதுடன் தொழிநுட்ப வளாகத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டு கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளமையும் மற்றும் கனகரெத்தினம் விளையாட்டு மைதானமானது பிரதேச சபையின் பொறுப்பிலிருந்து பாடசாலைக்கு உரியதாக மாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

கமு/கமு விபுலாநந்த மத்திய கல்லூரியின் அதிபரான திரு.ரி.வித்யாராஜன் அவர்களின் இந்த கால கட்டங்களில், பல்வேறு சவால்களுக்கு அதிபரும் அக்கல்லூரியின் ஆசிரியர் குழாமும் முகம் போதிலும் எதிர்நீச்சலுடன் மாணவரின் அடைவு மட்டத்தினை அதிகரித்து வருகின்றனர். அதிபர்கள் வரலாற்றில் மாணவ ஆளுமை அதிகம் சாதனையாக மாறியமை இந்த அதிபரின் காலத்திலேயே என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும். திரு.ரி.வித்யாராஜன் அவர்கள் 2020.03.26 திகதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து 24வது அதிபராக - திரு.ம.சுந்நரராஜன் பதில் அதிபராக பொறுப்பேற்றார் பின்

இக்கல்லூரியின் 25வது அதிபராக விளங்கும் திரு B. சந்திரேஸ்வரன் அவர்கள் 12.06.2021 இடமாற்றம் பெற்று சென்றதைத் தொடர்ந்து 13.06.2021 இல் இருந்து மீண்டும் அதிபராக திரு.ம.சுந்நரராஜன் பொறுப்பேற்றார்.

"கல்வி மான்களின் கனவில் உதித்த விபுலாநந்தரின் நாமம் கொண்ட கல்விக்களம் அகவை எழுபத்தைந்தை எட்ட காலம் உள்ளவரை நிலைக்கட்டும் கண்ணியமாய்”